தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் உரம், பூச்சி மருந்து தெளிக்கும் பணி மும்முரம்

வல்லம் : தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, புதுக்கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதியில் விவசாயிகள் வயல்களில் உரம் தெளித்தல் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளில் வெகு மும்முரம் காட்டி வருகின்றனர்.தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா, தாளடி மற்றும் இளம் நாற்றுக்கள், நாற்றங்கால் ஆகியவை நீரில் மூழ்கி பாதித்தது. மழை நின்ற நிலையில் வயல்களில் தேங்கியிருந்த நீரை வடித்து சாகுபடி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். இதற்கிடையில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் பல பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்தது.

மேலும் பால் பிடிக்கும் தருணத்தில் இருந்த கதிர்களும் பாதிக்கப்பட்டன. பூச்சிகளின் தாக்குதலும் அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மீண்டும் உரம் தெளிப்பு, பூச்சிமருந்து அடித்தல், களை பறித்தல் உட்பட பல பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது மழை இல்லை என்றாலும் வயல்களில் பூச்சித் தொல்லையை போக்க மூன்றாம் முறையாக உரம் தெளிக்கப்படுகிறது. மருந்துகள் அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: