நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானது : அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை : நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானது என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது.நீட் தேர்வு 12 ஆண்டு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக்குகிறது.மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. நீட் விலக்கு பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Related Stories: