×

முதல் சீசனுக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா-35 ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யும் பணி தீவிரம்

ஊட்டி :  ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில், ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.எனவே, மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் டிசம்பர் மாதம் முதல் துவக்கப்படும். 6 மாதத்திற்கு பின் பூக்கும் தாவரங்கள் டிசம்பர் மாதம் முதல் நடவு செய்யப்படும்.

அதன்பின், படிப்படியாக மலர் செடிகள் பூக்கும் காலத்தை பொறுத்து பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்படும். தற்போது நடவு பணிகள் துவக்கப்பட்டு பூங்காவில் நாற்று நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 35 ஆயிரம் மலர் தொட்டிகளிலும் நாற்று நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்காக உரம் கலந்த மண் கொட்டப்பட்டு தொட்டிகளை தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுவுள்ளது. பூங்காவில் உள்ள ஊழியர்கள் தற்போது தொட்டிகளை தயார் செய்து, அதில் நாற்று நடவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 ஓரிரு நாட்களில் இந்த நடவு பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ooty: The Botanical Garden in Ooty hosts an annual flower show in May. Out of town to see this and
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...