இன்ஸ்டாகிராமில் எனது பெயரை பயன்படுத்தி பணம் ெபற்று மோசடி முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை:  சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துறைமுகம் பகுதியை சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு எனக்கும் சதீஷ் (எ) பபுலு என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றோம். இந்நிலையில்வர் சதீஷ் இன்ஸ்டாகிராமில் எனது படத்தை பலரிடம் பணம் பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவருடைய மனைவி என்று சொல்வி பண மோசடியில் ஈடுபடுகிறார்.

 இசை சக்சேரியில் என்னை பாட வைப்பதாக கூறி பலரிடம் முன்பணம் வாங்கி வருகிறார்.  இதைப்பற்றி கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டியும், நீ கச்சேரிக்கு செல்லும்போது உன் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுக்கிறார். எனவே சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்க வேண்டும்.  இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: