×

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

சென்னை: அரசு விழா தினங்களான வரும் 15, 18, 26ம் தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்துடன் நாளை முழு ஊரடங்கையும் சேர்த்து டாஸ்மாக்கிற்கு 4 நாள் விடுமுறை வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பாணை: அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்கள், அரசு விழாவாக  அனுசரிக்கப்படும் திருவள்ளுவர் நாளான வரும் 15ம் தேதி, வடலூர் ராமலிங்கர்  நினைவு நாளான 18ம் தேதி மற்றும் குடியரசு தினமான 26ம் தேதி ஆகிய தினங்களில்  இயங்காது. ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு என்பதால் அன்றும் டாஸ்மாக்கிற்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tasmac , 4 day holiday for Tasmac stores
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்