×

ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றவேண்டும்: வந்தவாசி அருகே பொதுமக்கள் கோரிக்கை

வந்தவாசி: வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் ஊராட்சி பசுவந்தான் பகுதியில் 70க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து தெருக்களும் சாலையை விட பள்ளமான பகுதியில் உள்ளதால் மழைநீர் தேங்கி விடுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழைநீர் மாரியம்மன் கோயில் தெருவில் இன்றுவரை தேங்கி சகதியாகியுள்ளது. இதனால் சுமார் 20க்கும் அதிகமான குடும்பத்தினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கிராமத்தில் பள்ளி அருகே உள்ள மேல்நீர் தேக்க தொட்டியில் உள்ள 4 கான்கிரீட் தூண்களில் சிமெண்ட் கலவை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. தொட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. தொட்டிக்கு ேமல் மூடி இல்லாததால் பறவையின் இறைச்சி கழிவு உள்ளிட்டவைகளை குடிநீரில் விழுந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.  எனவே, தெருக்களில் தேங்கிய கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கவேண்டும், பழுதான மேல்நீர் தேக்க  தொட்டியை இடித்து அப்புறபடுத்தி புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், வந்தவாசி பிடிஓ அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பிரச்னைகள் குறித்து மனு அளித்துள்ளேன். அப்பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு பகுதியில் பள்ளியின் பின்புறம் வந்தவாசி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக ₹35 லட்சத்தில் சிறுபாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி ஆரம்பிக்கப்படும் என்றார்.

Tags : Vandavasi , Removal of dangerous drinking water tank: Public demand near Vandavasi
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...