×

பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தநிலையில், டிசம்பர் 6-ம் தேதி ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் இஸ்லாமியர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது உமர் அப்துல்லா என்பவர் மனு தாக்கல் செய்தார்.  

இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது   விசாரணை நடத்தி நீதிபதிகள், போராட்டம் என்பது ஜனநாயக உரிமை தான் என்று தெரிவித்தனர். மேலும்  பாபர் மசூதி இடிப்பு தினம் இஸ்லாமியர்களின் மறக்க முடியாத நாள் என்று நீதிபதி கூறினார்.

அதனையடுத்து கூறிய நீதிபதி, பாபர் மசூதி இடிப்பு நாளில் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டதை சட்டவிரோதமாக பார்க்க முடியாது. போராட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை, மேலும் போராட்டம் அமைதியான முறையில் தான் நடைபெற்றது. எனவே போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யும் மாறு நீதிபதி ஆணையிட்டார்.


Tags : Islamists ,Airwadi ,Babar Mosque ,Branch , Court dismisses case against Islamists protesting near Babri Masjid demolition bus stand near Ervadi bus stand
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...