பிரதமரின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தேசிய இளைஞர் திருவிழா நடைபெறும் என்றும், இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 7500 பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்விழாவை பிரதமர் மோடி நேரில் துவக்கி வைப்பார் என கவர்னர் தமிழிசை தெரிவித்திருந்தார். இதுகுறித்து பாஜக தரப்பில் கூறியதாவது:கொரோனா பரவி வரும் சூழலில் புதுச்சேரியில் நடைபெறும் தேசிய இளைஞர் திருவிழாவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவை தொடங்கி வைக்க பிரதமர் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: