மாதகடப்பா மலையில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மாதகடப்பா மலைப்பகுதியில் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  மலையில் பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அழித்தனர். இதில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த காளிதாஸ் மற்றும் முனிராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: