திருச்சுழி பகுதியில் மல்லி பயிர் வளர்ச்சி பாதிப்பு-விவசாயிகள் கவலை

திருச்சுழி : திருச்சுழி பகுதியில் மழை பெய்யாததால் மல்லி பயிர் வளர்ச்சியின்றி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திருச்சுழி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் விவசாயிகள் தங்களது நிலங்களை சீரமைத்து நிலக்கடலை, கம்பு, மக்கச்சோளம், உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை பயிரிட்டிருந்தனர்.இப்பயிர்கள் ஓரளவிற்கு விளைச்சல் ஏற்பட்டது. பின்னர் கடந்த மாதம் விவசாயிகள் மல்லி, மிளாகாய் விதைகளை நிலங்களில் விதைத்தனர். ஆனால் அதன்பின் மழை சரிவர பெய்யாததால் நிலத்தில் போட்ட மல்லி வளர்ச்சியடையாமல் போனது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி பாலமுருகன் கூறுகையில், ‘எங்கள் ஊரில் ஏராளமான ஏக்கரில் மல்லி, மிளகாய் போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளோம். மல்லி விதைத்ததில் இருந்து மழை பெய்யாமல் கருமேகத்தோடு கலைந்து செல்வதால் நிலத்தில் விதைக்கப்பட்ட மல்லி சரிவர முளைக்காமல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது’ என்றார்.

Related Stories: