×

ஓமிக்ரான் தொற்று லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் : உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா : ஓமிக்ரான் தொற்று லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உருமாறிய வைரஸான ஓமிக்ரான் தொற்று உலகளவில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானம், டெல்டாவை விட ஓமிக்ரான் பாதிப்பு குறைவு என்றாலும் அதனை அலட்சியமாக கருத வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நிலவும் சமத்துவமென்மையை அதிக உயிரிழப்புக்கு காரணம் என்று டெட்ராஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தொற்று நோய்களை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அவர், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். இருப்பினும் பூஸ்டர் மேல் பூஸ்டர் செலுத்துவது கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : World Health Organization , உலக சுகாதார நிறுவனம்
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...