3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடல்: மீறினால் கடும் நடவடிக்கை; அதிருப்தியில் மதுபிரியர்கள்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஜனவரி 15,18, 26ம் தேதிகளில் மூடப்படும் என டாஸ்மாக்  மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார். ஜனவரி 15ல் திருவள்ளுவர் தினம், 18ல் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவுநாள், 26ல் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 9-ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்றும் கடையை திறக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதத்தில் 4 நாட்கள்  டாஸ்மாக்  மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிள் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் தான் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதத்தில் மூன்று நாட்கள் கடைகள் அடைக்கப்படும் என்ற செய்தி மதுபிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: