திருச்சி அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற லாரியை மறித்து பணம் கேட்டு தாக்குதல்: இந்து சபா அமைப்பு நிர்வாகி 2 பேர் கைது

துறையூர்: திருச்சி அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற லாரியை மறித்து பணம் கேட்டு மிரட்டி தாக்கிய இந்து சபா அமைப்பு நிர்வாகிகள் 2 பேரை போலீசார்  கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையிலிருந்து எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு ஒரு லாரி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குவாடியில் சென்ற போது 2 காரில் வந்த 2 பேர் லாரியை தடுத்து நிறுத்தி, அகில பாரத இந்து சபா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டு மாடுகள் ஏற்றி செல்வது குறித்து விசாரித்தனர். அதன் பின்னர் ரூ.10,000 தருமாறு கேட்டனர்.

அவர்கள் பணம் இல்லை என மறுத்துள்ளனர். லாரியில் இருந்த கடலூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ரவி ஆகிய இருவரையும் தாக்கியதுடன், பணம் தராமல் லாரியை எடுக்க விடமட்டோம் என்று கூறி மிரட்டியதோடு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தியதில், இந்து சபா அமைப்பின் மாநில அமைப்பாளர் சிரஞ்சீவி(29), புறநகர் மாவட்ட செயலாளர் கண்ணன்(32) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: