மதுரையில் பிரதமர் பங்கேற்க இருந்த பொங்கல் விழா ரத்து: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி

மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா, தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது என்று பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை, அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் பாரதிய  ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தலைமை வகித்தார். கூட்டம் முடிந்ததும் மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘‘‘மதுரையில் ஜனவரி 12ம் தேதி பாஜக ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார்.

இந்த நிகழ்வு, மாநில அரசின் கொரோனா ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவிற்கு பிரதமர் வருவது குறித்து அரசு முடிவெடுக்கும். ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரத்தின் வெளிப்பாடு. அது எந்த காரணத்தை கொண்டும் தள்ளிப்போக கூடாது. ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக, சிறப்பாக நடத்தப்படும் என நம்புகிறோம். நீட் விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் தெரிவித்த கருத்தை அவருடைய தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம்’’ என்றார்.

Related Stories: