ஒருநாள் உலக கோப்பைக்கு மிதாலி தலைமையில் மகளிர் அணி: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: நியூசிலாந்தில் நடைபெற உள்ள  ஒருநாள்  மகளிர் உலக கோப்பை தொடருக்கு மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் ஒரு உலக கோப்பை  2021ம் ஆண்டு  நியூசிலாந்தில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி மார்ச் 4ம் தேதி முதல் ஏப்.3ம்  தேதி வரை  மகளிர் உலக கோப்பை போட்டி,  நியூசியின் முக்கிய நகரங்களில் நடக்க உள்ளன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2வது இடம் பிடித்த இந்தியா உட்பட 8 அணிகள்  பங்கேற்கின்றன. இந்தியா மார்ச் 6ம்  தேதி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

உலக கோப்பைக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் ,  நியூசிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 தொடரில் இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது. அதற்காக உலக கோப்பை  மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மிதாலிராஜ் தலைமையிலும், டி20 ஆட்டத்துக்கு ஹர்மன்பிரீத் தலைமையிலும்  அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது.  இந்த 2 அணிகளிலும் முக்கிய வீராங்கனைகளான  ஜெமீமா ரோட்ரிக்ஸ், ஷிகா பாண்டே ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

அணி விவரம்: ஒருநாள்: மிதாலி ராஜ்(கேப்டன்), ஹர்மன்பிரீத்(து.கேப்டன்),  மந்தானா,  ஷபாலி, யஸ்டிகா, தீப்தி, ரிச்சா(விக்கெட் கீப்பர்), ஸ்நேக ராணா,  ஜூலன் கோஸ்வாமி, பூஜா,  மேக்னா, ரேணுகா,  தானியா(விக்கெட் கீப்பர்),  ராஜேஸ்வரி, பூனம்.

கூடுதல் வீராங்கனைகள்: எஸ்.மேக்னா, ஏக்தா, சிம்ரன்

டி20: ஹர்மன்பிரீத்(கேப்டன்), மந்தானா(து.கேப்டன்), ஷபாலி, யஸ்டிகா, தீப்தி, ரிச்சா(விக்கெட் கீப்பர்), ஸ்நேக ராணா, பூஜா,  மேக்னா, ரேணுகா, தானியா(விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி, பூனம்,  ஏக்தா, எஸ்.மேக்னா, சிம்ரன்.

Related Stories: