திருத்தணி முருகன் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் பணிபுரியும் உதவி ஆணையர் ரமணிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்ட இணை ஆணையர் பரஞ்ஜோதி உள்பட, மொத்தம், 181 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இந்து அறநிலை துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து நேற்று மலைக்கோவிலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் இணைந்து கோயில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, மேலாளர்கள், ஊழியர்கள் என, 161 பேருக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும், 20 துப்புரவு தொழிலாளர்கள் என மொத்தம், 181 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: