×

கலைஞர் பெயரை மூடி மறைத்ததால் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு

சென்னை: கடந்த காலம் அதிமுக ஆட்சியில் கலைஞருடைய  பெயரை மூடி மறைத்த காரணத்தினால் இப்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அம்மா உணவக பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்ட பொருளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு: அம்மா உணவகம் எந்த இடத்திலும் மூடப்படவில்லை. 2 ஆயிரம் ரூபாய் விற்பனையாகும் இடத்தில் 9 ஆயிரம் சம்பளம் கொடுக்கவேண்டி உள்ளது. அதனால் தான் சுழற்சி முறையில் பணியாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். பணியாளர்கள் குறைக்கப்படவில்லை. சம்பளமும் குறைக்கப்படவில்லை.
 
அவை முன்னவர் துரைமுருகன்: நீங்கள் கலைஞர் பெயரில் உள்ள எத்தனையையோ மூடிவிட்டீர்கள்.

எடப்பாடி பழனிசாமி:அம்மா உணவகங்களை மூடினால் அதன் பலனை அனுபவிப்பீர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்:கடந்த காலம் உங்களுடைய ஆட்சியில் அவை முன்னவர் கூறியது போல் கலைஞருடைய பெயரை மூடி மறைத்த காரணத்தினால் இப்போது மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். அந்த தண்டனையை இப்போது அனுபவித்து வருகிறீர்கள்.

Tags : AIADMK ,Chief Minister , People have punished AIADMK for covering up the name of the artist: Chief Minister's speech in the Legislative Assembly
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...