மேற்கு வங்கத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நாளை காணொலி மூலம் பிரதமர் மோடியுடன் பேச உள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள சூழலில் பிரதமர் மோடியுடன் பேச மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். மேற்கு வங்காளத்திலும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன.  மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதித்த 2,075 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டியளித்தார். மொத்தம் 403 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.  கொரோனா பாதிப்பு விகிதம் 23.17% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.18% ஆகவும் உள்ளது.  19,517 படுக்கைகள் தயாராக உள்ளன.  மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முடிவு கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  

கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.  இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி வழியேயான கூட்டமொன்றில் நாளை பேச உள்ளேன் எனவும் கூறினார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.  சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 2,85,401 பேர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புத்தாண்டிற்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

Related Stories: