புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் குடியிருப்பில் கொள்ளை.: பணம், பொருட்கள் திருடிச் செல்லும் காட்சி சிசிடிவி-யில் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் குடியிருப்பில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிப்மர் மருத்துவர்கள் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள் மருத்துவ பிரிவு தலைவர் உள்பட 3 மருத்துவர்கள் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கையில் ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் பணப்பையை திருடிச்செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வீடு புதுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 75 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் கழுத்தில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: