பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..!!

திருச்சி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜேந்திர பாலாஜி பின்னர் திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திர பாலாஜியை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: