ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மழைநீர் வடிகால்கள் சேதப்படுத்தப்பட்டதால் தான் தியாகராய நகரில் அதிகமாக நீர் தேங்கியது என்று முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால் தி.நகரில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இது அதிமுக செய்த கோளாறு எனவே ஸ்மார்ட் சிட்டி பணியின் போது பல விதிமீறல் நடைபெற்றுள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என அறிவித்தார்.

Related Stories: