×

பாட்னாவுடன் இன்று மோதல்; வெற்றியை தொடருமா தமிழ் தலைவாஸ்?

பெங்களுரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 34வது லீக் போட்டியில் புனேரி பால்டன்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஆதிக்கம் செலுத்திய புனேரி பால்டன் 33-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி 36-35 என்ற புள்ளி கணக்கில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி ரெய்டர் நவீன்குமார் 25 புள்ளிகள் குவித்தார். இன்று இரவு 7.30 மணிக்கு தமிழ்தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ், 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் 6 போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி 3 டை என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பாட்னா 5 போட்டியில் 4ல் வெற்றி, ஒரு தோல்வியுடன் 3வது இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது கடைசி போட்டியில் உபியோத்தாவை வீழ்த்திய தமிழ்தலைவாஸ் வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது.

Tags : Patna ,Tamil Talawas , Clash with Patna today; Will Tamil Talawas continue to win?
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!