×

வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு!: பைசர், மாடர்னா, ஜான்சன் நிறுவனங்களுடன் பேசி வருவதாக WHO கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் தகவல்..!!

டெல்லி: பன்னாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரிப்பது குறித்து பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் தென்கிழக்கு நாடுகளின் சுகாதார கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன், சிங்லா நாட்டில் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இந்தியாவிலேயே தடுப்பூசி மருந்து தயாரிப்புகளை தொடங்குவது குறித்து பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட சர்வதேச தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஹர்ஷ்வர்தன் கூறினார். 
அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் அமெரிக்க பயணத்தின் போது தடுப்பூசி மருந்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை தடையின்றி வழங்குவது குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேவைக்கு அதிகமாக உள்ள 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கும் நிலையில், அமெரிக்காவின் தடுப்பூசி ஒதுக்கீட்டிற்கு இந்தியா காத்திருப்பதாகவும் வெளியுறவு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

The post வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு!: பைசர், மாடர்னா, ஜான்சன் நிறுவனங்களுடன் பேசி வருவதாக WHO கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Ministry of External Affairs ,WHO ,Pizer ,Moderna ,Johnson ,Delhi ,Pfizer ,Johnson & Johnson ,Dinakaran ,
× RELATED சீனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்!