சென்னை விமான நிலையத்தில் 1,364 நட்சத்திர ஆமை பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமானநிலைய சரக்கக பிரிவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்களில் அனுப்ப வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்து அனுப்பினர். சென்னையில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்றவந்திருந்த பார்சல்கள் மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பார்சல்களை திறந்து பார்த்தபோது ஏராளமான நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பதை பார்த்தனர். அங்கிருந்து மொத்தம் 1,364 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது போலி முகவரி பயன்படுத்தி நட்சத்திர ஆமைகளை மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. ஆந்திரா சதுப்புநில பகுதியில் இருந்து பிடித்துகொண்டு வந்து கடத்த முற்பட்டது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகளை சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: