சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையிலான சட்டத்திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.