தி.பூண்டி அருகே தலைக்காடு பள்ளியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: சீரமைத்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பழுது நீக்கி கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில தெரிவித்துள்ளதாவது: தலைக்காடு அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து மாணவர்கள் மற்றும் சத்துணவு சமையலுக்கு தேவையான குடிநீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பழுது நீக்கம் செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொள்ளிடம் குடிநீர் குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: