×

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்று, நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 06,07-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உல் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

அதனையடுத்து வரும் 8-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையை ஒட்டி உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 09-ம் தேதி தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஓட்டும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை மையம் தகவலை வெளியிட்டுள்ளது.



Tags : Chennai ,Meteorological Department , The weather in Chennai will be partly cloudy for the next 48 hours .: Meteorological Department Information
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்