தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 8- ல் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், வங்கக்கடலில் ஜனவரி 9- ல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதால், தென்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், தஞ்சை,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: