தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் நடவடிக்கையில் ஈடுப்படும் என அரசு நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.  தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரை செய்யும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், இடஒதுக்கீடு பணிகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. வார்டு வாரியாக இறுதி கட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2022 பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. வரும் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், அதற்கான அறிவிப்பை ஜனவரி மாதம் 3ம் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: