×

கூட்டாட்சி தத்துவத்தை நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு சிதைத்து வருகிறது: தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கூட்டாட்சி தத்துவத்தை நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு சிதைத்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை என்று கூறினார். மேலும் மருத்துவத்துறையில் தமிழகம் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது என்றும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.


Tags : Md. KKA Stalin , Federal Philosophy, NEED Entrance Exam, Chief MK Stalin
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...