×

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை

சிட்னி : உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு விசா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் மிகப்பெரிய டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் சிலாம் ஜனவரி 17 முதல் 30 வரை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு நாட்டு வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச் நேற்று இரவு மெல்போர்ன் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இவர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில், மருத்துவ காரணங்களை கூறி விக்டோரிய மாகாண அரசிடம் தொடர்வில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு நுழைய தடுப்பூசி கட்டாயம் எனக் கூறி விமான நிலையத்திலேயே அந்நாட்டு அரசு தடுத்து நிறுத்தி விசாவை ரத்து செய்தது. இதையடுத்து அங்குள்ள தனியார் விடுதியில் ஜோகோவிச் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தை நாட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Novak Djokovic ,Australia , டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் தடுப்பூசி
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...