×

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான தேர்வுகள் நாளை முதல் திட்டமிட்டப்படி நடைபெறும்: யுபிஎஸ்சி

டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான தேர்வுகள் நாளை முதல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. குடியுரிமை பணிகளுக்கான யுபிஎஸ்சி பிரதான தேர்வுகள் நாளை முதல் 9ஆம் தேதி வரையும் பின்னர் 15 மற்றும் 16ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தேர்வு எழுதுவோருக்கும், தேர்வு கண்காணிப்பாளருக்கும் எந்தவித தடங்கலும் ஏற்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தேர்வர்களின் எலெட்ரானிக் அனுமதி சீட்டு மற்றும் அலுவலர்களின் அனுமதி சீட்டுகளை போக்குவரத்துக்கான அனுமதி அட்டையாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்குமாறும் யுபிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது. தேர்வு நாட்களில் தேர்வுக்கு முன்னதாக பொது போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளை யுபிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சிவில் சர்வீஸ் மெயின்ஸ் தேர்வுகள் திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தேர்வை நடத்தும் அலுவலர்களின் சுமுகமான பயணத்தை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

Tags : UPSC , UPSC
× RELATED யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைப்பு