×

54வது பிறந்தநாளையொட்டி கனிமொழி எம்பி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: கனிமொழி எம்பி தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி தனது 54வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். இதனையடுத்து, அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் உள்ள திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சென்னை சி.ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி இல்லத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி, சக்கரபானி, கே.சி.பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதா ஜீவன், என்.கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், எம்.ஆர்.காந்தி, ஆவடி சா.மு.நாசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.அப்துல்லா, வில்சன், சண்முகம், எம்எல்ஏக்கள் டி.ஆர்.பி.ராஜா, ஜி.வி.மார்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஐ.பி.செந்தில்குமார், கோ.தளபதி, எம்.மோகன், ஜோசப் சாமுவேல், சங்கரன்கோவில் ராஜா, பரந்தாமன், டாக்டர் லக்ஷ்மணன், திருப்பூர் செல்வராஜ், அப்துல் வஹாப், வெற்றி செல்வன், அமலுவிஜயன், காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், விசிக எம்எல்ஏ ஆளூர் ஷானவாஸ், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, திமுக மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாபன், திருத்தனி எம்.பூபதி, நே.சிற்றரசு, செல்லத்துரை மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலமாக கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்தார், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டிவிட்டரில் தனது வாழ்த்தை தமிழில் தெரிவித்தார்.

Tags : Kanimozhi MP ,Chief Minister ,MK Stalin , Kanimozhi MP met and congratulated Chief Minister MK Stalin on his 54th birthday
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...