பாறை சரிவு சீரமைப்பு பணி முடிகிறது: திருப்பதி மலைப்பாதை 10ம் தேதி முதல் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2ம் மலை பாதையில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு 10ம் தேதி  முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், டிசம்பர் 1ம் தேதி காலை திருமலையில் மண்சரிவு  ஏற்பட்டு இரண்டாவது மலைபாதையில் பெரிய பாறை உருண்டு விழுந்ததில்

நான்கு இடங்களில் சாலைகள் கடுமையாக சேதமடைந்தது. அந்த பாதையில் போக்குவரத்தை நிறுத்தி போர்க்கால அடிப்படையில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இணைப்பு சாலையை  வழியாக ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மறுபுறம் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பக்கசுவர் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பாறைகள் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள இடத்தில், ராக் போல்ட் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளது. இரண்டாவது மலைப்பாதையில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு 10ம் தேதி மீண்டும் பக்தர்கள் பயன்படுத்தப்பட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தேவஸ்தான தலைமை பொறியாளர் ஜெகதீஸ்வர் நேற்று தெரிவித்துள்ளார்.

Related Stories: