உபி.யில் காங். பேரணிகள் ரத்து

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொதுக்கூட்டங்களும், பேரணிகளும் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாரத்தான் போட்டிகள், பிரசார பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Related Stories: