×

கோவாக்சின் செலுத்தியபின் பாராசிட்டமல் வேண்டாம்: பாரத் பயோடெக் அறிவிப்பு

புதுடெல்லி: ‘கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, பாராசிட்டமல் அல்லது வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ‘சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பிறகு 3 பாராசிட்டமல் 500 மிகி மாத்திரை எடுத்துக் கொள்ள சில மையங்களில் பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வேறு சில கொரோனா தடுப்பூசிகளுக்கு பாராசிட்டமல் பரிந்துரைக்கப்படுகிறது. அது கோவாக்சினுக்கு அவசியமில்லை. எங்களின் மருத்துவ பரிசோதனையின் போது 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதில், 10-20 %  பேருக்கு மட்டுமே லேசான காய்ச்சல் இருந்தன. அதுவும்  சரியாகி விடும். எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை’.

Tags : Kovacs , Do not paracetamol after covacin payment: Bharat Biotech Announcement
× RELATED தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சின் வருகை