திருவள்ளூர் நகராட்சி அறிவிப்பு: திட, திரவ பொருட்கள் கையாளும் கட்டுரை போட்டிக்கு விண்ணப்பம் இ.மெயில் மூலம் அனுப்பலாம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் நகராட்சியில் திட மற்றும் திரவ பொருட்களை கையாள்வது தொடர்பான கட்டுரைப்போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்போர் இன்றைக்குள் இ.மெயில் மூலம் அனுப்பி வைக்கவேண்டும் என்று நகராட்சி ஆணையர் சி.வி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திட மற்றும் திரவ கழிவுகளை கருப்பொருளாகக் கொண்டு சோசியல் இன்குலுசன், ஜீரோ டம்ப், பிளாஸ்டிக் வேஸ்ட், டிரான்ஸ்பரன்சி ஆகிய 4 தலைப்புகளில் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரைகள் இன்று 6ம் தேதிக்குள் நகராட்சிக்கு commr.tiruvallur@gmail.com என்ற இ.மெயில் மூலம் அனுப்பிவைக்கவேண்டும்.

போட்டியில் மாநில அளவில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு ₹5 லட்சமும், 2வது பரிசு ₹2.5 லட்சமும், 3 வது பரிசு ₹1.5 லட்சமும், 4 வது பரிசு ₹1 லட்சமும், 5 வது பரிசு ₹75 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. நகராட்சி அளவில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு ₹10 ஆயிரமும், 2வது பரிசு ₹5 ஆயிரமும், 3 வது பரிசு ₹3 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: