போந்தவாக்கம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தொடக்கி வைத்தார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இதில், 10 முதல் 12 வகுப்பு மாணவ, மாணவிகள் 220 பேர் படித்து வருகிறார்கள். இந்நிலையில், இப்பள்ளியில் 15 முதல் 18 வரையிலான மாணவ - மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு தலைமை தாங்கினார்.

இதில், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், பூண்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர், இளைஞரணி அமைப்பாளர் தில்லைகுமார், பள்ளி துணை ஆய்வாளர் சவுத்திரி, திமுக பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், மாவட்ட பிரதிநிதி சிவய்யா, சலபதி கேசவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வம், கோல்டு மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை தலைமையாசிரியர் கதிரொளி வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தார். அப்போது, எம்எல்ஏவிடம், மாணவர்களுக்கு 100 பேருக்கு டேபிள் சேர், பள்ளிக்கு காம்பவுண்டு சுவர், சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  

இதைகேட்ட எம்எல்ஏ முதல் கட்டமாக 50 டேபிள், சேர்கள் வழங்குவதாகவும், பின்னர் மீதமுள்ள 50 டேபிள் சேர்கள் வழங்குவதாக கூறினார். விரைவில் காம்பவுண்டு சுவர், புதிய பள்ளிக்கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இறுதியில், ஆசிரியர் வேணு நன்றி கூறினார்.

பின்னர், சீத்தஞ்சேரி மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தொடக்கி வைத்தார்.

இதில், தலைமையாசிரியர் முரளிதர், பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, துணை செயலாளர் நாகராஜ், சீத்தஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் சரசு பூபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர், கச்சூர் தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் தடுப்பூசி முகாமையும் எம்எல்ஏ தொடக்கி வைத்தார். இதில், பள்ளியின் தாளாளர் அவந்திகா ராஜேஷ், நிறுவனத்தலைவர் ரங்கநாதன், துணைத்தலைவர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: