சென்னையில் 10ம் தேதி நடக்கிறது திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்: மாநில செயலாளர் எழிலரசன் அறிவிப்பு

சென்னை: திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் வருகிற 10ம் தேதி நடைபெறும் என்று மாநில செயலாளர் சி.வி.எம்.எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரசன் எம்எல்ஏ வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர் கூட்டம், வருகிற 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், எனது தலைமையில், இணை மற்றும் துணைச் செயலாளர்களான கோவி.செழியன் எம்.எல்.ஏ., பூவை சி.ஜெரால்டு-மன்னை த.சோழராஜன், எஸ்.மோகன், சேலம் ரா.தமிழரசன், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், வீ.கவிகணேசன், எம்.ஏ.எம்.ஷெரீப், அதலை பி.செந்தில்குமார், எம்.வெங்கடேஷ்குமார் முன்னிலையில் நடைபெறும். கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில, அமைப்பாளர்கள் மட்டும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா; ‘வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்’. திமுக மாணவர் அணி உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கல்லூரிகளில் அமைப்பு நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: