ரயில் நிலையங்களை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

சென்னை: திருவள்ளூரில் உள்ள ரயில் நிலையத்தில் நடைமேடை, கழிவறை, சிக்னல் ரூம், பயணிகள் ஓய்வு அறை, நிலைய மேலாளர் அறை போன்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதை தொடர்ந்து அவர் திருவள்ளூர் ரயில் நிலைய வளாகத்தில் படுக்கை வசதிகள், கழிவறை வசதிகளுடன் கூடிய பெண்கள் ஓய்வெடுக்கும் அறையைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Related Stories: