என்எச் 47 தேசிய நெடுஞ்சாலையில் சாலை பணிக்கு இடையூறாக மின்கம்பங்கள்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் என்எச் 47 தேசிய நெடுஞ்சாலை களியக்காவிளை வழியே கேரளவை இணைக்கிறது. இந்தியாவின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரி முக்கடலும் சங்கமிக்கும் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் தேசிய நெடுஞ்சாலை 47ஐ பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை போதிய பராமரிப்பின்றி போக்குவரத்துக்கு கடும் இடையூறாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் குடிநீர் திட்ட பணிகளுக்காக, இந்த தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் தோண்டி சீரழிக்கப்பட்டது.

தொடர்ந்து தரமற்ற வகையில் தார் போட்டதால் சாலை உடனடியாக சிதையவும் ெதாடங்கியது. இந்த நிலையில் முளகுமூடு அடுத்த கல்லுவிளை பெட்ரோல் பங்க் அருகே போக்குவரத்து மற்றும் சாலை சீரமைப்பு பணிகளுக்கு இடையூறாக மின்கம்பங்களை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் சாலை சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல அதே பகுதியில் தனியார் மினி பஸ்களையும் இடையூறாக நிறுத்தி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்ைக எடுத்து சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ேவண்டும் என பொது மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories: