×

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் சரியான முறையில் செயல்படவில்லை: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றசாட்டு

டெல்லி: நீட் த்தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையிலிருப்பதற்கு ஆளுநர்தான் பொறுப்பு என மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நீட் த்தேர்வுக்கு விலக்கு தொடர்பாக மத்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பவில்லை என டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை அரசியல் காரணமாக அமித் ஷா சந்திக்க மறுப்பதாக நினைக்கிறேன் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில்  அதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என 7 கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் சந்திக்க திட்டமிட்டிருந்தனர். சுமார் 3 முறை சந்திக்க சென்றும் இறுதியாக அவர்களுக்கு அனுமதியானது ரத்து செய்யப்பட்டிருந்தது. கடுமையான பணிச்சுமை காரணமாக இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதாக உள்த்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் அமித்ஷா உடனான சந்திப்பு நிறுத்திவைக்கப்பட்டு, உள்த்துறை அமைச்சகத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிக்க கோரி கூட்டாக மனு அளித்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக போராடிவருகிறோம். ஏற்கனவே ஆளுநரிடம் இருக்க கூடிய மசோதாவை உடனடியாக உள்த்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து 2 முறைக்கு மேல் அழுத்தத்தை பதிவு செய்துள்ளார், நாங்களும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்த்துறை அமைச்சரை இன்று சந்திக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் உடனடியாக எங்களுடைய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருடைய பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இன்று பேசப்பட்டதால், அமித்ஷா அந்த விவகாரம் தொடர்பாக கடுமையான பணிச்சுமையில் இருப்பதால் தான் எங்களுக்கு அனுமதி ரத்தட்டு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் சரியான முறையில் செயல்படவில்லை. அவர் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக துரோகம் இளைத்து வருகிறார் என்ற ஒரு கடுமையான குற்றசாட்டை முன்வைத்து, ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற  அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் நின்றும் எங்களுக்கு எந்தவிதமான பலனும் இதுவரை கிடைக்கவில்லை, அடுத்தகட்டமாக நாங்கள் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுளோம். தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். ஏனென்றால் அரசு விழாவிற்கு தான் பிரதமர் வருகை தரவுள்ளார். இதனால் நாங்கள் அவரை எதிர்க்க விரும்பவில்லை. ஆனால் இந்த நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ச்சியாக தமிழக அரசுக்கும், தமிழக மாணவர்களுக்கும் துரோகம் இளைத்து வரும் ஆளுநர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Tags : Governor ,NEET ,DMK Parliamentary Committee ,DR ,Palu , NEED EXAMINATION, GOVERNOR, DMK DEPARTMENT COMMITTEE, DR BALU
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...