×

நெல்லை சாஃப்டர் பள்ளி விபத்து - விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல்

நெல்லை: நெல்லை டவுன் சாஃப்டர் பள்ளி விபத்து தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையிலான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி நெல்லை டவுனில் உள்ள சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து சிறப்பு குழு அமைக்கப்பட்டது. கோட்டாட்சி தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ஆகியோர் இந்த குழுவில் அடங்கி இருந்தனர். இந்த கடந்த 10 நாட்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அடித்தளம் அந்த சுவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவறையை சுற்றியுள்ள மற்ற சுவர்களையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கொண்டு கூடுதல் கழிப்பறைகளை அந்த பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் முதற்கட்ட பணிகள் நடத்துவதற்கான அனுமதியை விசாரணை குழுவிடம் பள்ளி நிர்வாகம் கேட்டுள்ளதின் அடிப்படையில் தற்போது பதிவெண் தயாரிப்பது உள்ளிட்ட தேர்வுக்கான பணிகள் மட்டும் குறிப்பிட்ட அலுவலர்களை மட்டும் வைத்து வருவாய் துறை முன்னிலையில் செய்வதற்கான அனுமதியை அந்த குழு கொடுத்துள்ளது. மேலும் சான்றிதழ் வழங்கப்பட்ட அதிகாரிகளிடம் பல்வேறு விசாரணைகளை சிறப்பு குழுவினர் நடத்தியுள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று அல்லது நாளை ஒரு உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருவதால் பள்ளி மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி மூடப்பட்டிருந்தாலும் கூட 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வழி கல்வி மட்டும் நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags : Paddy Softer , softer school, nellai
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...