திருச்சி அருகே பரபரப்புஜல்லிக்கட்டு காளைக்கு ஈட்டி குத்து உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

முசிறி: திருச்சி சமயபுரம் கீழ ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜான். இவர் சொந்தமாக 4 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை ஒரு காளையின் திமிலில் ஈட்டியால் குத்தி ரத்தம் வழிந்தது. இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்து, தோட்டத்து பகுதிக்கு சென்று ஜான் பார்த்தார். இதனால் கோபமடைந்த ஜானின் தம்பி ஜான்சன், காளையை ஈட்டியால் குத்திய மர்ம நபரை ஆத்திரத்தில் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

அப்போது அங்கு கஞ்சா போதையிலிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27), ஜான்சனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த ஜான்சன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஈட்டியால் குத்தியதில் காயமடைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து ஜான் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories: