கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது!: வீட்டுத் தனிமை குறித்து புதிய விதிகளை வெளியிட்டது ஒன்றிய அரசு..!!

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து புதிய விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  தனியார் மருத்துவமனைகளிலும், வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அறிகுறி அல்லாத அல்லது குறைந்த பாதிப்புடன் வீடுகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து புதிய வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வீட்டு தனிமை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

* கொரோனா பாதிப்பு இருந்தால் அச்சப்பட வேண்டியதில்லை; உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

* கொரோனா அறிகுறிகள் இருந்தால் தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது.

* சுயவைத்தியம் பார்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்; மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை.

* 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.

* 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லாமல் இருந்தால் 7 நாளுக்கு பிறகு தனிமை முடிந்து வெளியே வரலாம்.

* மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories: