திருவள்ளூரில் சோகம்!: உயிர் நண்பன் மறைவை தாங்க முடியாமல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நண்பன் தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாக்காமல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை மாநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மில்டன், தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மில்டனுடன் 11ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்தவர் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார்.

இருவரும் உயிர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 5ம் தேதி பெற்றோர் கண்டித்ததாக கூறி உதயகுமார் தற்கொலை செய்துகொண்டார். நண்பன் இறந்ததால் மில்டன் மனஉளைச்சலில் இருந்துள்ளார். சில நாட்களில் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் உதயகுமார் இறந்த அதே 5ம் தேதியான இன்று அதிகாலை மில்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் சக நண்பன் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: