×

பிரதமரின் கிசான் சம்மான் நிதி கிடைக்கவில்லை என வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-திருப்பத்தூர்- நாட்றம்பள்ளி சாலையில் பரபரப்பு

நாட்றம்பள்ளி : பிரதமரின் கிசான் சம்மான் நிதி,  நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் இயங்கிவரும் அரசு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில்  அரசு பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய அரசு, வருவாய் குறைந்த வங்கிகளை ஒன்றிணைத்தது.

அந்த வகையில், விஜயா வங்கி, தேனா, ேபங்க் ஆப் பரோடா ஆகியவற்றை ஒன்றிணைத்தது. அதன்படி, பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இதில் விவசாயிகள், 100 நாள் திட்ட பணியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள், ஊராட்சி மன்ற வங்கி கணக்கு என பல தரப்பினர் கணக்கு வைத்துள்ளனர். வங்கிகள் இணைப்பின்ேபாது, வாடிக்கையாளர்களுக்கு பழைய வங்கி கணக்குகள் மாற்றி புதிய வங்கி எண் வழங்கினர்.

இந்நிலையில் மத்திய அரசு வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி கடந்த இரண்டு தவணைகள் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அதனால்,நேற்று காலை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுப்பேட்டை வங்கி முன் திடீரென திருப்பத்தூர்-நாட்றம்பள்ளி சாலையில் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை  எம்எல்ஏ தேவராஜி மற்றும் நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடம் விரைந்து ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளிடம் சமரசம் பேசினர்.

அப்போது, விவசாயிகள், ‘‘எங்களுக்கு கிடைக்கவேண்டிய பிரதமரின் கிசான் சம்மான் நிதி கடந்த இரண்டு தவனைகள்  கிடைக்கவில்லை. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது வேளாண்மை அலுவலகத்தில் பார்க்க சொல்கிறார்கள். வேளாண்மை அலுவலகத்தில் கேட்டால், நீங்கள் வங்கியில் கேளுங்கள் என கூறி எங்களை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

வங்கி கணக்கு எண் மாற்றப்பட்டதால் எங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதியுதவி கிடைக்கவில்லை’’ என்று வேதனையுடன் கூறினார்கள்.இதையடுத்து வங்கி மேலாளர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்எல்ஏ தேவராஜ் உத்தரவிட்டார். அதற்கு, வங்கி ஊழியர்கள், வேளாண் துறை அலுவலர்கள், ‘‘இரண்டு வாரத்தில் நிதி கிடைக்க அனைத்து விவசாயிகளும் உரிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்’’  என கூறினர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : PM ,Kisan Samman , Natrampalli: Prime Minister's Kisan Samman Nidhi, Natrampalli Farmers' Government Bank operating in the Puthuppettai area next
× RELATED பிரதமர் பதவியில் இருந்து கொண்டு...