வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு: மின்வாரிய ஊழியர்கள் தீவிர பணியில் ஈடுபாடு

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 3வது அலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பழுதுநீக்கி, உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்தப்பட்டியில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 2 நிலைகளிலும் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனல்மின் நிலைய ஒன்றாவது நிலையின் 3-வது அலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து நேற்று மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட்மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் மின் உற்பத்தி தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.      

Related Stories: