மன்னார்குடியில் ஒமிக்ரான் பரவலை தடுக்க ஆலோசனை கூட்டம் வர்த்தக நிறுவனங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்-ஆர்டிஓ அறிவுறுத்தல்

மன்னார்குடி : தமிழகத்தில் பரவும் உருமாறிய கொரோனா ஓமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மேலும், பொது மக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டு ப்பாடுகளை வரும் 10ம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசு உத்தரவு நடைமுறை படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு தரப்புகளை சார்ந்த வணிகர்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி தலைமையில் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.இதில், வர்த்தகர்கள் சார்பில் மாவட்ட பொருளாளர் எஸ்எம்டி கருணாநிதி, வருவாய் துறை சார்பில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் கார்த்திக், வட்டாட்சியர் ஜீவானந்தம், நகராட்சி சார்பில் நகர் நல அலுவலர் டாக்டர் கஸ்தூரி, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி கூறுகையில், தமிழகத்தில் பரவும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டு நடை முறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிறுவனங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அனைவரும் முககவசம் அணிய வேண்டும்..திருமண மண்டபங்களில் 100 பேர்களும், இறப்பு நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் கூடுவதற்கு அனுமதிக்க படும். வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இயக்க கூடாது.வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக் கப் படும். உருமாறிய கொரோ னா ஓமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படு த்தும் வகையில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories: