×

இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 2,135 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரானின் பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 828 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 653 பேர், தலைநகர் டெல்லியில் 464 பேர், கேரளத்தில் 155 பேர், ராஜஸ்தானில் 174 பேர், குஜராத்தில் 154 பேர், தமிழ்நாட்டில் 121 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 2,14,004 பேர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புத்தாண்டிற்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். நேற்று கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. பீகார் மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Tags : India ,Union Health Department , omicron
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...